சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று (29) பரீட்சை எழுதிய மாணவர்களால் அப் பரீட்சாத்திகளுக்கு பரீட்சை மண்டபவ மேற்பார்வையாளர்களாக கடமையாற்றிய இலங்கை தொழில்நுட்ப சேவையை சேர்ந்த அதிகாரிகள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடாத்தியதில் மூவர் காயமுற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் விவசாய டிப்ளோமா மட்டம் - 05,06 மாணவர்களுக்கான இறுதி தவனைப் பரீட்சை நேற்று (29) வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இப் பரீட்சாத்திகளுக்கான பரீட்சை மண்டப மேற்பார்வையாளராக தொழில்நுட்ப கல்வி திணைக்களத்தின் அனுமதியுடன் அக்கரைப்பற்று மற்றும் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் கடமையாற்றினார்கள்.
பரீட்சை மண்டபத்தில் சில மாணவர்கள், பரீட்சை எழுதும் போது சில குளறுபடிகளை செய்த போது அவர்களிடம் மேற்பார்வை விரிவுரையாளர்கள் இவ்வாறு குளறுபடிகள் செய்ய வேண்டாம் என்று சொல்லியும் கேட்காதாவர்களாக அம்மாணவர்கள் இருந்துள்ளார்கள்.
பின்னர் பரீட்சை முடிவுற்று நிறைவடைந்த பின்னர் சில மாணவர்கள் பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்கியுள்ளார்கள். இதனால் ஒருவருக்கு தலையில் பலத்த அடியும், மற்ற இரண்டு விரிவுரையாளர்களுக்கும் கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தாக்கிய மாணவர்கள் தலைமறைவாகி உள்ளார்கள்.
காயமுற்ற விரிவுரையாளர்கள் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச் சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று மாலை வேளையில் நடைபெறவிருந்த பரீட்சைகள் மேற்பார்வையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு இன்றி பரீட்சை நடாத்த முடியாது என்று தொழில்நுட்ப கல்வி திணைக்களம் தெரிவித்ததையடுத்து பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் மேற்பார்வையாளர்கள் மீது மாணவர்கள் தாக்குதல்!!!
Reviewed by Editor
on
November 30, 2019
Rating:
Reviewed by Editor
on
November 30, 2019
Rating:
