அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (28) வியாழக்கிழமை காலை அக்கரைப்பற்று "அய்னா கடற்கரை கார்டன் வரவேற்பு மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ்.றினோஸ்டீன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் அவர்களும், கல்முனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ. ஐ. பயாஸ் றஸ்ஸாக் அவர்களும், விசேட அதிதிகளாக கலாநிதிகள், கல்விமான்கள், கல்விப் பணிமனையின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் 05 வேளையும் தொழுகைக்காக பள்ளிக்கு செல்லும் (குறிப்பாக சுபஹ் தொழுகை) முதலாம் தரத்தை சேர்ந்த மாணவர்கள், வகுப்பு ரீதியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், வலய ரீதியாக முதலாம் இடம் பெற்ற மாணவர்கள், வலய ரீதியாக ஆங்கில பாடத்தில் முதல் இடத்தை பெற்ற மாணவர்கள், மாகாண, மாவட்ட மட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மற்றும் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்கள் என அனைவரும் கௌரவிக்கப்பட்டு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும், நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுடன் தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சைக்காக கற்பித்த ஆசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், ACE நிகழ்ச்சித்திட்ட ஆசிரியர்கள், இல்ல ரீதியான குழுக்களின் தலைவர்கள் மற்றும் இவ்வருடத்தில் குறைந்த விடுமுறை பெற்ற ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக் குழுவினரால் அதிபர், பிரதி அதிபர்களுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள்.
அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
Reviewed by Editor
on
November 29, 2019
Rating:
Reviewed by Editor
on
November 29, 2019
Rating:



