வெல்லவாயா- தனமல்வில பிரதான வீதியில் விபத்து


வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குடாஓய,அலிவங்குவ என்ற பிரதேசத்தில் இன்று (05) செவ்வாய்க்கிழமை மாலை தனியார் பேருந்தொன்றும் டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் தனமல்வில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கவலைக்கிடமாக உள்ள ஏழு பேர் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.
வெல்லவாயா- தனமல்வில பிரதான வீதியில் விபத்து வெல்லவாயா- தனமல்வில பிரதான வீதியில் விபத்து Reviewed by Editor on November 05, 2019 Rating: 5