(க.ஷியா)
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் அப்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரான சயீத் ராட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்தவேளையில், கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான அலுவலகத்தை சுற்றி வளைத்து அப்பகுதியில் உள்ள வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு பாரிய இடையூறுகளை ஏற்படுத்தியமை தொடர்பில் கறுவா தோட்ட பொலிஸார் குறித்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கு இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Reviewed by Editor
on
November 04, 2019
Rating:
Reviewed by Editor
on
November 04, 2019
Rating:
