கோழி ஏற்றிச் சென்ற லொறி அட்டாளைச்சேனையில் விபத்து!!! மூவர் படுகாயம் , 500கோழிகள் உயிரிழப்பு


கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக கென்டர்  வாகனம்  அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இன்று (15) காலை மரமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏறாவூர் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றினை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த வாகனம் இன்று அதிகாலை 4.45 மணியளவில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை சதோச விற்பனை நிலையத்திற்கு முன்னால் இருந்த மரமொன்றில் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் பயணித்த மூவரில் இருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகிய போதிலும் அவ்வாகனத்தின் சாரதி சேதமடைந்த வாகனத்தினுள் அகப்பட்டமையால் அவரை மீட்டெடுக்கும் முயற்சியில் சில மணி நேரம் மக்கள் போராடியும் முடியாமல் போனதையடுத்து கனரக வாகனத்தின் உதவியுடன் சாரதி மீட்கப்பட்டார்.

விபத்துக்குள்ளான ஏறாவூர் மீச் நகர்ப் பிரதேசத்தினை சேர்ந்த அஸீஸ் அஹமட் றூஹுல்லா(29), எஸ்.யூசூப்(37) ஆகியோர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும், பலத்த காயங்களுக்கு உள்ளான சாரதியான ஏறாவூர் - 02, மீச் நகரினைச் சேர்ந்த ஜுனைட் றிஸாத் (30) கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்‌.

சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோழி ஏற்றிச் சென்ற லொறி அட்டாளைச்சேனையில் விபத்து!!! மூவர் படுகாயம் , 500கோழிகள் உயிரிழப்பு கோழி ஏற்றிச் சென்ற லொறி அட்டாளைச்சேனையில் விபத்து!!! மூவர் படுகாயம் , 500கோழிகள் உயிரிழப்பு Reviewed by Editor on December 15, 2019 Rating: 5