அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கட்டார் விஜயம்


( ஜெமீல் அகமட் )

கட்டார் நாட்டில் இடம்பெறும் 19 வது டோஹா போரம் சர்வதேச மாநாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டுள்ளார்.

உலகின் பல நாடுகளிலிருந்தும் அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் கல்விமான்கள் துறைசார் நிபுணர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இம் மாநாட்டை கட்டார் மன்னர் ஷேக் தமீம் அல் ஹமாத்  நேற்று (14 ) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கட்டார் நாட்டு அரசாங்கத்தின்  உத்தியோகபூர்வ அழைப்பையேற்று  முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இம் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

இம்மாநாடு உலகளாவிய சமூகத்தில், புத்துயிர் பெரும் ஆட்சி எனும் தொனிப்பொருளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் கட்டார் விஜயம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவர் கட்டார் விஜயம் Reviewed by Editor on December 15, 2019 Rating: 5