வெல்லவாய - எல்ல பிரதான வீதியின் எல்ல பகுதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒன்பது பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த வேனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றதோடு,விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கல்முனையில் இருந்து சென்ற வேன் எல்ல பகுதியில் விபத்து - 9 பேர் காயம்
Reviewed by Editor
on
December 02, 2019
Rating:
