சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக உத்தியோகப்பூர்வமாக நியமிக்க கோரிய கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவருடைய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி 2020 ஜனவரி 3 ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும் போது அவர் உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்படுவார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க, இன்று (5) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தின் போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில், அதனை அடுத்து சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க கோரிய கடிதத்தை ஏற்றார் சபாநாயகர்
Reviewed by Editor
on
December 05, 2019
Rating:
