அக்கரைப்பற்று மாநகர சபையினால் வருட இறுதியில் நடாத்தப்படுகின்ற 'மாநகர விருது' விழா இன்று (31) மாநகர ஹல்லாஜ் தகவல் வள மைய கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மாநகர ஆணையாளரின் நெறிப்படுத்தலிலும், கௌரவ மாநகர முதல்வரின் தலமையிலும் நடைபெற்ற இவ்விருது விழாவில் சாதனையாளர்கள் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய, மாவட்ட, மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், மருத்துவம், பொறியியல் துறையில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், மாநகர சபையில் கடமையாற்றி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
மாநகர விருது நிகழ்வானது ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் கௌரவ மாநகர முதல்வரின் தலைமையிலும் வெகு விமர்சையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அக்கரைப்பற்று மாநகர விருது விழா
Reviewed by Editor
on
December 31, 2019
Rating:
