38 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல்.சலாஹூதீன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று (10) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் ஏ.எல்.சலாஹூதீன் அவர்களின் சேவையினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (10) செவ்வாய்க்கிழமை, அக்கரைப்பற்று கல்விப் பணிமனையின் கேட்போர் கூடத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் தனது உரையில்,
நிர்வாக உத்தியோகத்தர் சலாஹூதீன் தனது சேவைக் காலம் முடிவு பெறும் வரைக்கும் தன் பணியினை செவ்வனே செய்து, சக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் அன்பாக பழக கூடியவராகவும் இருந்தார். அது மாத்திரமல்லாமல் தன்னால் முடியுமான உதவியை அவருடைய பதவி மூலம் செய்தும் காட்டிய ஒரு உத்தியோகத்தர் அவர் என்றால் அது மிகையாகாது என்று தனதுரையில் உரையாற்றிச் சென்றார்.
நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு அவர் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
இவர் அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை ஆகியவைகளில் செயலாளராகவும் கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார் நிர்வாக உத்தியோகத்தர் சலாஹூதீன்
Reviewed by Editor
on
December 11, 2019
Rating:
