மலையக பாரம்பரியத்துடன் கொட்டகலையில் ஓவியம்


கடந்த இரண்டு வாரமாக நாட்டை அழகு படுத்தும் நோக்கில் தென்னிலங்கை மற்றும் பல்வேறு இடங்களில் சுவர் ஓவியங்களை இளைஞர்கள் வரைந்து வருகின்றனர்.

ஓவியங்கள் என்பது எளிதில் அழிந்துப் போகக் கூடியவையல்ல. சீகிரிய ஓவியங்கள் பல நூற்றாண்டுகளை கடந்து இன்றளவும் உலக புகழ் பெற்றவையாகவுள்ளன.

இன்னமும் பல நூற்றாண்டுகளுக்கு அவை இலங்கையில் பாதுக்கப்பட போகின்றவையாகும். இனவாத சிந்தனையில் வரையப்படும் ஓவியங்கள் நாளை தலைமுறையினரையும் பாதிக்க கூடியவை.

இவ்வாறிருக்க மலையகத்தின் கொட்டகலை பகுதியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மலையக பாரம்பரத்தியத்தையும் தமிழ் மக்களின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலும் உள்ளதோடு, இவற்றில் இனவாதமும், மதவாதமும் இல்லை.

கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத்தின் முயற்சியால் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த விடயம் வரவேற்கப்பட கூடியதாகும் என்பதுடன், மலையக பகுதிகளில் ஓவியங்கள் வரையப்படும் போது, இன மற்றும் மத நல்லிணக்கத்தையும் மலையக பாரம்பரியத்தையும் அடிப்படையாக கொண்டு வரைவது ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
மலையக பாரம்பரியத்துடன் கொட்டகலையில் ஓவியம் மலையக பாரம்பரியத்துடன் கொட்டகலையில் ஓவியம் Reviewed by Editor on December 11, 2019 Rating: 5