(பைஷல் இஸ்மாயில்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனால் குடிநீர் வசதி மற்றும் மின்சார இணைப்பு வசதிகள் நாடுபூராகவும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வழங்கப்பட்டு வருகின்ற மின்சார இணைப்பு வசதி மற்றும் குடிநீர் வசதிகள் யாவும் தேவையுடைய மக்களுக்கு சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படுகின்றதா???
அந்த இணைப்புக்கள் யாவும் முறைகேடாக அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் அவர் அறிந்துகொள்ள முயற்சித்தாரா???
இல்லை அறிந்தும் அறியாதுபோல் அவர் இருக்கின்றாரா??? என்ற விடயத்தினை நான் கேட்க விரும்புகின்றேன்.
இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் போக்கு தொடர்ந்தும் செல்லுமானால் அவர்மீதும், கட்சிமீதும் அம்பாறை மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இல்லாமல் போவதுடன் கட்சியின் எதிர்கால வளர்ச்சியும் மக்கள் மத்தியில் பல கேள்விக்குறிகளை ஏற்படுத்திவிடும் என்பதில் எவ்வித மாற்றமும்மில்லை.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அசமந்தப்போக்கும் கட்சியின் வீழ்ச்சியும்
Reviewed by Editor
on
December 04, 2019
Rating:
