வரி நிவாரணம் பொது மக்களுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா – ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை

அரசாங்கம் வழங்கியுள்ள வரி நிவாரணம் பொது மக்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் நேற்று (12) நடைபெற்றுள்ளது. இதன் போது ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
ஆளுங்கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

வரி நிவாரணம் பொது மக்களுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா – ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வரி நிவாரணம் பொது மக்களுக்கு உரிய முறையில் சென்றடைந்துள்ளதா – ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை Reviewed by Editor on December 13, 2019 Rating: 5