மோட்டார் சைக்கிள் விபத்தில் கானூஸ் முதலாளி மரணம்


அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியின் ஆறாம் கட்டை சந்தி எனுமிடத்தில் இன்று (12) வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் கணரக வாகனம் விபத்துக்குள்ளாகி மோட்டார் சைக்கிளில் சென்றவர் மரணமானார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று மாலை அம்பாறை அக்கரைப்பற்று பிரதான வீதியின், ஆறாம் கட்டை எனும் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதிய நிலையில், மோட்டார் சைக்கிளிளை செலுத்தி வந்த அக்கரைப்பற்று காணுஸ் மின் உபகரண கடையின் உரிமையாளர் அல்ஹாஜ். பரீட் (கானுஸ்) பலத்த காயங்களுக்குள்ளாகி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இவர் அக்கரைப்பற்று மாநகர சபையின் கெளரவ முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களின் மாமனார் (மனைவியின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் கானூஸ் முதலாளி மரணம் மோட்டார் சைக்கிள் விபத்தில் கானூஸ் முதலாளி மரணம் Reviewed by Editor on December 13, 2019 Rating: 5