தற்போது காத்தான்குடி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள், டெங்கு அபாயம் போன்றவற்றை எதிர் கொள்ளக்கூடிய சகல மருத்துவ வசதிகளும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இருப்பதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர். எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.
இந்த காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு எவரும் தனியார் மருந்தகங்களுக்கோ அல்லது வேறு மருத்துவமனைகளுக்கோ செல்லாமல் எமது வைத்தியசாலைக்கு வருகை தந்து இலவசமாக மருந்துகளை பெறமுடியும் என்று வைத்திய அத்தியட்சகர் ஜாபீர் மேலும் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி மக்களுக்கு,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அறிவித்தல்
Reviewed by Editor
on
December 04, 2019
Rating:
