இந்தியாவின் வெற்றிக்கு நான் அடித்த 2 சிக்சர்கள் காரணமல்ல!!! ரோகித் சர்மா தெரிவிப்பு


நேற்று (29) ஹாமில்டனில் நடைபெற்ற 3 ஆவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது.

180 வெற்றி ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிப்பிடிக்க நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் சிறப்பாக துடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எனினும் முதல் பந்தில் வீச்சில் டெய்லர் சிக்சர் மூலம் 6 ஓட்டங்களையும்,அடுத்த பந்தில் 1 ஓட்டத்தையும் பெற்றார்.

இன்னும் 4 பந்துகளில் 2 ஓட்டங்கள் மட்டுமே தேவையாக இருந்த போது அடுத்த பந்தில் வில்லியம்சன் ஆட்டமிழக்க சமி அடுத்தடுத்த பந்துகளை துல்லியமாக வீசி துடுப்பாட்ட வீரர்களை தடுமாற செய்து இறுதியாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

கடைசியாக சூப்பர் ஓவர் மூலம் போட்டி நடைபெற்று கடைசி பந்து வரை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது.

இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ஓட்டங்களை தேவையான போது இந்திய அணியின் அதிரடி நாயகன் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.

இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா,

இந்திய அணியின் வெற்றிக்கு நான் அடித்த 2 சிக்சர்கள் காரணமல்ல. முதலில் சூப்பர் ஓவர் கிடைக்க காரணமானவர் சமி தான். தலைசிறந்த துடுப்பாட்ட வீரர் களத்தில் இருந்தபோதிலும் கடைசி ஓவரில் 9 ஓட்டங்களை கொடுக்காமல் துல்லியமாக பந்து வீசியவர் அவரே. எனவே இந்த வெற்றிக்கு முழு காரணம் சமி தான்" என சர்மா கூறியுள்ளார்.
இந்தியாவின் வெற்றிக்கு நான் அடித்த 2 சிக்சர்கள் காரணமல்ல!!! ரோகித் சர்மா தெரிவிப்பு இந்தியாவின் வெற்றிக்கு நான் அடித்த 2 சிக்சர்கள் காரணமல்ல!!! ரோகித் சர்மா தெரிவிப்பு Reviewed by Editor on January 30, 2020 Rating: 5