யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு பயணித்த அரசுக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மதுபோதையில் இருந்தமையால், பஸ்ஸினை தடுத்து நிறுத்தி அதில் பயணித்த 46 பயணிகளையும் காப்பாற்றி மற்றொரு பேருந்தில் அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைத்த சம்பவம் நேற்றிரவு (29) யாழ்ப்பாணம் நாவற்குழியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (29) மாலை 7.45க்கு அக்கரைப்பற்று நோக்கி பயணித்த அரச பேருந்தை
யாழ்ப்பாணம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் இணைந்து பேருந்தை சோதனையிடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
சோதனையிட முற்பட்ட போது பஸ்ஸின் சாரதி மதுபோதையில் இருந்தமை கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சாரதியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட இராணுவத்தினர், பஸ்ஸை சோதனையிட்ட போது 2 பியர் மற்றும் சாரயப் போத்தல் ஒன்றும் சாரதியின் இருக்கைக்கு கீழ் இருந்து மீட்கப்பட்டது.
சாரதி கடுமையாக எச்சரித்து அவர் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலை முகாமையாளருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.
பஸ்ஸில் பயணித்த 46 பயணிகளும் வேறோரு பஸ் மூலம் அக்கரைப்பற்றுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு இருந்தனர்.
படையினர் மற்றும் பொலிஸாரின் சோதனையால் 46பேர் உயிர் தப்பினார்கள்
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:
Reviewed by Editor
on
January 30, 2020
Rating:

