புது வருட நிகழ்வு அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயத்தில் நடைபெற்றது



2020ஆம் ஆண்டை வரவேற்றும், அரசாங்க சேவை சத்திய பிரமாண நிகழ்வும் இன்று (01) புதன்கிழமை காலை 9.30மணிக்கு  அக்கரைப்பற்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தில், பிராந்திய முகாமையாளர் எந்திரி. ஜே.என். கரீம் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிராந்திய முகாமையாளர் ஜே.என்.கரீம் தேசியக்கொடியையும், நிறுவனத்தின் கொடியை பொறியியலாளர் மயூரதன் அவர்களும் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள்.



அதனைத் தொடர்ந்து நாட்டுக்காக அர்ப்பணித்த இராணுவ வீரர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசாங்க சேவை சத்தியப் பிரமாணமும் மேற்கொள்ளப்பட்டது.





இந் நிகழ்வில் அக்கரைப்பற்று நீர் வழங்கல் பிராந்திய முகாமையாளர் காரியாலய சகல உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.





புது வருட நிகழ்வு அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயத்தில் நடைபெற்றது புது வருட நிகழ்வு அக்கரைப்பற்று நீர் வழங்கல் காரியாலயத்தில் நடைபெற்றது Reviewed by Editor on January 01, 2020 Rating: 5