ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்.” என்று தலிபான்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் விமானம் ஒன்று நேற்று (27) திங்கட்கிழமை மாலை நொறுங்கி விழுந்தது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் காஜினி மாகாணத்தின் தேயாக் பகுதியில் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பு விமானமே நொறுங்கி கிடந்ததாகும்.
விபத்துக்குள்ளான விமானம் நொறுங்கி கிடந்த இடம் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும். இதில் உளவுப்படையை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் இருந்ததோடு இதில் 9 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் விழுந்ததற்கு தலிபான்கள் தான் காரணம் என்று தெரிய வருவதோடு, அமெரிக்க போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று தலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
நாங்கள் தான் அமெரிக்க இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்!!! தலிபான்கள் அறிவிப்பு
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:

