சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மர்ஹூம் எப்.எம்.பைறூஸ் மற்றும் போரத்தின் முன்னாள் பொருளாளரும் நாடறிந்த ஒலிபரப்பாளருமான மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரின் மறைவையொட்டிய நினைவு சொற்பொழிவு கொழும்பில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் (31) வெள்ளிக்கிழமை மாலை 4.30மணிக்கு, கொழும்பு-10, விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
விசேட உரையாற்ற சர்வதேச அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட், டெய்லி மிரர் ஆலோசக ஆசிரியர் எம்.எஸ்.எம்.ஐயூப் ஆகியோர்கள் கலந்து கொள்ளவுள்ள இந்நிகழ்வில் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.
மேலதிக தகவல்களுக்கு போரத்தின் நிருவாகிகளான ஸாதிக் ஷிஹான் (0773112561) மற்றும் ஜெம்சித் அஸீஸ் ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
மறைந்த ஏ.ஆர்.எம்.ஜிப்ரி மற்றும் எப்.எம்.பைறூஸ் நினைவு சொற்பொழிவு
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:
Reviewed by Editor
on
January 29, 2020
Rating:

