இரத்ததான முகாம்


 (பைஷல் இஸ்மாயில்)

அட்டாளைச்சேனை தைக்காநகர் எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில்
”உதிரம் கொடுப்போம் உயிர்களைக் காபோம் ”எனும் தொனிப்பொருளில் இரத்ததானமுகாம் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.அஜ்மலின் நெறிப்படுத்தலின் கீழ் இன்று (25) சனிக்கிழமை தைக்கா நகர் ஸஹ்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.



அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.எப்.சாஹிறா தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் வைத்தியரினால் வைத்திய பரிசோதனை இடம்பெற்றதன் பின்னர் விளையாட்டுக் கழக வீரர்கள் இரத்ததானம் வழங்கி வைத்தனர்.

இரத்ததான முகாம் இரத்ததான முகாம் Reviewed by Editor on January 25, 2020 Rating: 5