சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பம்


வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கான வசதியினை இன்று (27) திங்கட்கிழமை முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இதற்கென அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தள செயலியும் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த இணையத்தள செயலி சோதனைக்குட்படுத்தப்பட்டு,அது வெற்றியளித்த நிலையில், இன்று காலை முதல் இணையத்தளத்தினூடாக வைத்திய சான்றிதழை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ள முடியுமென தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாதகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை பதிவுசெய்வதற்கு www.ntmi.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பம் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பம் Reviewed by Editor on January 27, 2020 Rating: 5