அந்-நூர் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது


அக்கரைப்பற்று கடற்கரை பேரியல் வீதியில் உள்ள அந்-நூர் பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்-நூர் நூலக திறப்பு விழா இன்று (22) புதன்கிழமை மாலை அந்-நூர் சமூக மற்றும் கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தலைவர் டாக்டர் அல்- ஹாபீழ் யு.எல்.எம் வாபா தலைமையில் நடைபெற்றது.



இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ். எம். ரஸான் (நழிமி) அவர்களும், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம். தமீம், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.கே.ஏ.பாஹிம், Iconic இளைஞர் அமைப்பின் தலைவர் யு. முகமது தில்சன், இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீஹூல் இலாஹி மற்றும் சமூக நலன்விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அந்-நூர் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது அந்-நூர் வாசிகசாலை திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on January 22, 2020 Rating: 5