யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (22) மீட்கப்பட்டுள்ளார்.
இந்த கொடுர சம்பவம் இன்று நண்பகல் வேளையில் மக்கள் நடமாட்டம் உள்ள யாழ். பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது.
கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றபோது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினர் குறித்த கொலையாளியை துரத்தி சென்று கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கொலை செய்யப்பட்ட மாணவி பேருவளையைச் சேர்ந்த எச்.டி.ஆர்.காஞ்சனா என்பவராவார்.
பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் வெட்டிக் கொலை!!! கொலையாளி உடனடியாக கைது
Reviewed by Editor
on
January 22, 2020
Rating:
Reviewed by Editor
on
January 22, 2020
Rating:


