வாகனம் தீப்பற்றி எரிந்ததில் சாரதி பரிதாப மரணம்


திருகோணமலை,தம்பலகமம் பாலபொட்டார் பாலத்திற்கு அருகாமையில் இன்று (01) அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் வாகன சாரதி கருகி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மிகுந்தபுற பகுதியைச் சேர்ந்த கந்தசாமி ஜெகநாதன் (47) என்பவரே உயிரிழந்தவராவார்.

வாகனம் தீப்பற்றி எரிந்தற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதோடு,
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


வாகனம் தீப்பற்றி எரிந்ததில் சாரதி பரிதாப மரணம் வாகனம் தீப்பற்றி எரிந்ததில் சாரதி பரிதாப மரணம் Reviewed by Editor on February 01, 2020 Rating: 5