தங்களுடைய நாட்டிற்கு எந்த மதத்தை சேர்ந்தவர்களும், எந்தவித பாகுபாடின்றி வரலாம் என்றும், வருகின்ற உங்களை நாங்கள் அன்புடன் அரவணைக்கிறோம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளுக்கு விசா கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலேயே கனடா பிரதமர் இந்த மனிதபிமான அழைப்பை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கனடா பிரதமர் மேலும் கூறியுள்ளதாவது,
வழக்கு விசாரணை, உயிருக்கு அச்சுறுத்தல், தீவிரவாதம் மற்றும் உள்நாட்டு யுத்தம் காரணமாக புகலிடம் கோரி வரும் புலம்பெயர்ந்தவர்களை கனடா அன்புடன் வரவேற்பதோடு, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் நாங்கள் அனுமதிப்போம், ஒற்றுமையே எங்களுடைய வலிமை என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
எந்த மதத்தினரும் எங்கள் நாட்டிற்கு வரலாம்!!! கனடா பிரதமர் அறிவிப்பு
Reviewed by Editor
on
February 01, 2020
Rating:
Reviewed by Editor
on
February 01, 2020
Rating:
