கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ்வருடத்துக்கான பொங்கல் விழா-2020 அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவில் நாளை (23) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழர்களின் கலை பண்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் நடைபெறவுள்ள மாகாண பொங்கல் விழாவில், பண்பாட்டு ஊர்வலம், மாட்டுவண்டிச் சவாரி, நெல் அறுவடை, பாரம்பரியப் பொருள்களின் கண்காட்சி, பாரம்பரிய நடனங்கள் உள்ளிட் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதுடன், விசேட அதிதிகளாக மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் இப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பண்பாட்டு பவனி மத்தியமுகாம் பிரதேசத்தில் இருந்தும், வீரச்சோலை பிரதேசத்தில் இருந்தும் சவளக்கடை பிரதேசத்திலிருந்துமாக 3 பிரிவுகளாக வந்து நிகழ்வு நடைபெறும் மத்தியமுகாம் 06 ஸ்ரீ முருகள் ஆலயத்தை வந்தடையும். ஊர்வலங்கள் ஆலயத்தை வந்தடைந்ததும் பொங்கல் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
அம்பாறை மாவட்ட பொங்கல் விழா நாவிதன்வெளியில்
Reviewed by Editor
on
January 22, 2020
Rating:
Reviewed by Editor
on
January 22, 2020
Rating:
