காத்தான்குடியிலுள்ள உணவகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன


(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி நகர சபை தவிசாளர் முகம்மட் அஸ்பரின் நடவடிக்கையினால் காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் சிற்றுண்டிச்சாலைகள் உணவகங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.

காத்தான்குடியிலுள்ள ஹோட்டல்கள் சிற்றுண்டிச்சாலைகள் உணவகங்களின் உரிமையாளர்கள் அங்கு வேலை செய்வோருக்கு கடந்த வாரம் காத்தான்குடி நகர சபையினால் முழு நாள் செயலமர்வும் நடாத்தப்பட்டது.

இதன் விளைவாக உணவங்களில் கடமையாற்றுபவர்கள் தலைமுடியை மறைத்துக்காணப்படுவதுடன் அதன் ஒழுங்குகளையும் பின்பற்றி சுத்தமாகவும் உணவுகளை தயாரிக்கின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை (31.01.2020) புதிய காத்தான்குடியிலுள்ள மன்சூர் புரியாணி உணவகத்தில் அதன் உரிமையாளர் அங்கு கடமையாற்றும் ஊழியர் இவ்வாறு காட்சியளித்தனர்.

காத்தான்குடியிலுள்ள உணவகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன காத்தான்குடியிலுள்ள உணவகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன Reviewed by Editor on January 31, 2020 Rating: 5