கிளிநொச்சிக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம்

கிளிநொச்சி மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபராக ரூபவதி கேதீஸ்வரன் தனது கடமைகளை இன்று (27)பொறுப்பேற்றார்.
மீள்குடியேற்றம் முதல் 2015ம் ஆண்டு வரை கிளிநொச்சி மாவடட அரசாங்க அதிபராக செயற்பட்ட அவர் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் அவர் மீண்டும் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகள் மற்றும் அத்தியாவசிய விடயங்கள் தொடர்பாக தான் நீண்ட கவனம் செலுத்தி, மக்களிற்கு வேண்டிய சகல விடயங்களையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையும், விடுபட்டுள்ள அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க உள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம் கிளிநொச்சிக்கு புதிய அரசாங்க அதிபர் நியமனம் Reviewed by Editor on January 27, 2020 Rating: 5