EYIMUN இன் மாநாடு தொடர்பான சுவர் ஓவியம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது


கிழக்கிலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஸ்தாபிக்கப்பட்ட "கிழக்கு சர்வதேச இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை"EYIMUN இன் முதலாவது மகாநாட்டினை முன்னிட்டு பொதுமக்களையும், பாடசாலை மாணவர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்து நிலைபேறும் இலக்குகளை (SDG's) 2030 பற்றிய தெளிவூட்டுதலை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட சுவர் ஓவியம் நேற்று (24) உத்தியோகபூர்வமாக EYIMUN 2020 இன் செயலாளர்  அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அவ்வமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஜனாப்.சப்னாஸ் மற்றும் ஏனைய உறுப்பினர்களினால் உத்தியோகபூர்வமாக அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது.


இம்மகாநாடு எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் 5 ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற உள்ளதோடு,இம்மாநாட்டிற்கு நாட்டின் நாளா புறத்தில் இருந்தும் பல பிரதிநிகள் கலந்து கொள்ள உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


நேற்றைய நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமத் நஷீல், அட்டாளைச்சேனை இளைஞர் சேவைகள் அதிகாரி பி.எம்.ரியாத், கிராம உத்தியோகத்தர் ஜனாப்.அஸ்வர், பாடசாலை அதிபர் ஏ.எம்.அஸ்மி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
EYIMUN இன் மாநாடு தொடர்பான சுவர் ஓவியம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது EYIMUN இன் மாநாடு தொடர்பான சுவர் ஓவியம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது Reviewed by Editor on January 25, 2020 Rating: 5