சாய்ந்தமருது மக்களின் 20வருட கால பிரதேச சபை கனவை, இன்று (15) நகரசபையாக மெய்யாக்க அரும்பணியாற்றி சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபையை பெற்றுக் கொடுக்க முழு மூச்சாக ஈடுபட்ட கிழக்கு மண்ணின் தளபதியும், முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களை வாழ்த்த, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஹனீபா மாஸ்டர் தலைமையிலான குழுவினர் அக்கரைப்பற்று கிழக்கு வாசலுக்கு வருகை தந்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் புடைசூழ கிழக்கு தலைவன் அதாஉல்லாஹ் வருகை தந்திருந்த சாய்ந்தமருது முக்கியஸ்தர்களினால் வாழ்த்தப்பட்டார்.
இச்சந்தர்ப்பத்தில் வருகை தந்திருந்தவர்களுக்கு மத்தியில் கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர்-
கல்முனை பிரிப்பு என்பது இன மத பேதம் கடந்து நீதமாக விரைவில் பிரித்து வழங்கப்படும் அதனைப்பற்றி யாரும் கவலைப்படத்தேவையில்லை.
சாய்ந்தமருது மக்கள் தற்போது சந்தோஷப்படுவதுபோல்
எஞ்சிய கல்முனை மாநகர பிரதேசமும் எனது பிரதேசம்தான்.அதனை முறையாக பிரித்து வழங்கும் பொறுப்பை இன்ஷா அல்லாஹ் நானே பொறுபேற்று செய்வேன். அதில் அங்கு யாருக்கும் தீங்கு நடக்காது.
எஞ்சிய பிரதேசங்கள் பிரிப்பதற்காக அமைக்கப்படவுள்ள விஷேட மீள் எல்லை நிர்ணய குழு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்க உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் மேலும் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஹனீபா மாஸ்டர், சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் அல்ஹாஜ் முபாரக், முன்னாள் பிரதேச செயலாளரும், நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான அல்-ஹாஜ் சலீம், சாய்ந்தமருது தோடம்பழ கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கிழக்கு தலைவனை வாழ்த்த, நகரசபை பெற்ற சாய்ந்தமருது மக்கள் கிழக்கு வாசலுக்கு படையெடுப்பு
Reviewed by Editor
on
February 15, 2020
Rating: