வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டது உறுதி, விசாரணையில் தெரிவிப்பு


மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இன்று (06) வியாழக்கிழமை அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தமை விசாரணையின் பின் ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி மட்டக்களப்பை சேர்ந்த  தம்பாப்பிள்ளை சிவராசா (55) என்பவரே  அடிகாயங்களுடன் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுணதீவு பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்யும் ஆயித்தி மலையைச் சேர்ந்த முகமட் அஸ்மி (31) மற்றும் வவுணதீவு நாவற்குடாவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு,அவர்களிடம் இருந்து பெறப்பட்ட  விசாரணைகளின்போதே, குறித்த பொலிஸ் உத்தியோத்தர் அடித்துக்கொலை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் கெளரவ ஏ.சி.றிஸ்வான் சடலத்தை பார்வையிட்டு,பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டது உறுதி, விசாரணையில் தெரிவிப்பு வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டது உறுதி, விசாரணையில் தெரிவிப்பு Reviewed by Editor on February 06, 2020 Rating: 5