‘ஐஸ்’ போதைப் பொருள் வர்த்தகர் மாட்டினார்!!!!


பல காலமாக காத்தன்குடி பகுதியில் ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த காத்தான்குடி வர்த்தகரை இன்று (06) வியாழக்கிழமை அதிகாலை காத்தான்குடி பொலிஸ் பெருங்குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன், கஞ்சாவை வைத்திருந்த இன்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. துமிந்த நயனசிறி தெரிவித்துள்ளார்.

410 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1440 கிராம் கஞ்சா என்பன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவையாகும்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதோடு, கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


‘ஐஸ்’ போதைப் பொருள் வர்த்தகர் மாட்டினார்!!!! ‘ஐஸ்’ போதைப் பொருள் வர்த்தகர் மாட்டினார்!!!! Reviewed by Editor on February 06, 2020 Rating: 5