ஜோர்தான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஏ.எல்.எம். லாபீர் தேசிய காங்கிரசில் இணைவு


இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜோர்டான் நாட்டுக்கான முன்னாள் தூதுவர் ஏ.எல்.எம். லாபீர்  தேசிய காங்கிரசில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டார்.

இவர் இலங்கை நிருவாகத்துறையில் மிக நீண்டகால அனுபவங்களை கொண்டவர் என்பதுடன் கடல் கடந்த தூதுவர் சேவையிலும் பல ஆண்டுகள் சிறப்பான அனுபவங்களை கொண்டவராகவும் காணப்படுகின்றார்.

ஜோர்டான் மற்றும் மத்திய கிழக்கில் இலங்கையின் நன்மதிப்பை தனது மூத்த இராஜதந்திர அணுகுமுறையின் ஊடாக நிலைநிறுத்துவதில் பாரிய பங்கு வகிப்பர் என்று பலராலும் போற்றப்படும் இவர், தேசிய காங்கிரசின் எதிர்கால வளர்ச்சியில் காத்திரமான செயற்பாட்டை முன்னெடுப்பதாகவும்,எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உருதிப்படுத்துவதற்கான முழு முயற்சியையும் மேற்கொள்வதாகவும் தேசிய காங்கிரசின் தேசிய தலைமை அல்-ஹாஜ் கௌரவ.ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களிடம் வாக்குறுதி வழங்கியுள்ளார்.


ஜோர்தான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஏ.எல்.எம். லாபீர் தேசிய காங்கிரசில் இணைவு ஜோர்தான் நாட்டுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஏ.எல்.எம். லாபீர் தேசிய காங்கிரசில் இணைவு Reviewed by Editor on February 13, 2020 Rating: 5