கடினபந்து அரையிறுதி போட்டிகள் இன்று



அக்கரைப்பற்று "NO NAME" விளையாட்டு கழகம் இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கடினபந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அரையிறுதி இரண்டு போட்டிகள் இன்று (13) வியாழக்கிழமை மாலை 1.00மணிக்கு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இச்சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் நாளை (14) அக்கரைப்பற்று பொது மைதானத்தில் நடைபெறும் என "NO NAME" விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான பெளசான் எமது செய்தி பிரிவிக்கு தெரிவித்துள்ளார்.

முதலாவது அரையிறுதி போட்டி-
ஸ்பார்டன் வி.க எதிர் விளாஸ்டர் வி.க
2020.02.13 @1.00

இரண்டாவது அரையிறுதி போட்டி-
எஸ்.எஸ்.சீ வி.க எதிர் கே.எஸ்.சீ
2020.02.13 @2.30

 
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

கடினபந்து அரையிறுதி போட்டிகள் இன்று கடினபந்து அரையிறுதி போட்டிகள் இன்று Reviewed by Editor on February 13, 2020 Rating: 5