அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி நிர்வாகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று (12) புதன்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் பதில் அதிபர் எஸ்.யூ.எம்.இம்தியாஸ், பதிவாளர் ஐ.பியாஸ், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்ரின், கல்லூரியின் விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்நிகழ்விற்க்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரத்ததானம் அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது!!!
Reviewed by Editor
on
February 13, 2020
Rating:
Reviewed by Editor
on
February 13, 2020
Rating:




