மனமே மலடு கவிதைத் துளிகள்


(க.ஷியா)

மழலையின் பொக்கை
வாயில் மது இருக்கிறது
என்று மயங்குல்
கண்டாயோ

அது உயிர்க் குழலையே
வழைத்துப் போடும்
அழகினைப் பாராயோ

சிலரது வாழ்வும் கரிசலில்
காய்வது என்றாயோ
உன் மன விரசமே
வார்த்தையின் விசமெனக்
கொண்டாயோ

மடி விரிதலும் விறைத்தலும்
இறையவன் சிந்தையில்
இயன்றது அறியாயோ

இங்கு மழலையும் மலடியும்
சமமெனக் கொள்வாயோ
இரண்டு உயிர் எனப் பார்ப்பாயோ

உந்தன் மனதின் மலடு
துடைத்திடப் பார்ப்பாயோ

                           
மனமே மலடு கவிதைத் துளிகள் மனமே மலடு கவிதைத் துளிகள் Reviewed by Editor on February 02, 2020 Rating: 5