அக்கரைப்பற்றில் மொட்டுக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது


பொதுஜன பெரமுன கட்சியின் அக்கரைப்பற்று பிரதான காரியாலயம் நேற்று (01) சனிக்கிழமை மாலை கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும்,  வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளருமான தேசசக்தி ஏ.எம்.நிஹால் (JP) தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இக்காரியாலய திறப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திசாநாயக்க அவர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களும், சிறப்பு அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ டப்ளியு.டீ.வீரசிங்க அவர்களும் கலந்து கொண்டு நாடவை வெட்டி காரியாலயத்தை திறந்து வைத்தனர்.




இந்நிகழ்வில் உலமாக்கள், உள்ளூர் அரசியல்வாதிகள், கட்சியின் அக்கரைப்பற்று தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம மற்றும் விசேட அதிதிகளுக்கு ஞாபகார்த்த சின்னம் மற்றும் பொன்னாடைகளும் போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.


அக்கரைப்பற்றில் மொட்டுக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது அக்கரைப்பற்றில் மொட்டுக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது Reviewed by Editor on February 02, 2020 Rating: 5