அதாஉல்லாஹ் ஊரகம் கடந்து பணி செய்யக்கூடியவர்


(தல்ஹா சீனி முஹம்மட்)

சுமார் ஐந்து நூற்றண்டுகள் அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த தேசம் சுதந்திரம் பெற்றதன் பின்னரான 72வருடத்தில் கொடுரமான உள்நாட்டு போரில் சிக்கி அவசரகால சட்டத்தின் கீழ் உள்நாட்டில் மக்கள் அடிமைகளாக வாழ்ந்தனர்.
2009ல் உள்நாட்டு யுத்தத்தினை எச்சமில்லாமல் வெற்றி கொண்ட போதும் உள்நாட்டு ஆட்சி அரசியலை இனவாத்தினை வைத்து நடத்துவதற்கே இங்குள்ள பெரிய சிறிய கட்சிகள் விரும்புகின்றன.
சுதந்திரத்தின் பின்னரான 72வருட ஆட்சியில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் மக்கள் நலன்புரி அரசினை தோற்றுவிப்பதில் தோல்வியை தழுவிவிட்டது.

ஐரோப்பியரின் ரோமன் கத்தோலிக்க சட்ட விழுமியங்களை தற்போதும் ஆட்சியியலாக கொண்டு, பௌத்த போதனையை இனவாத அரசியலுக்கான கருவியாக பயன்படுத்தியதால் சுதேசஅரசியல் தடம் மாறிச்சென்றிருக்க முடியும்.

பெரும்பான்மை தேரவாத பௌத்த சமூகத்தின் போதனையில் ரோமன் கத்தோலிக் மற்றும் இஸ்லாத்தில் காணப்படுவது போன்ற சட்ட ஏற்பாடுகள் குறைவு,சில சமயங்களில் சிங்கள ஆட்சியியல் தோல்வியை தழுவியதற்கு இது கூட காரணமாக இருக்கலாம்.
பூகோள அரசியலில் இந்த நாட்டின் அமைவிடம் வளமான தேசமாக தன்னை உலகில் நிலைநிறுத்த சந்தர்ப்பமிருந்தும் அது சாத்தியப்படாமைக்கான காரணம் தான் என்ன?

யுத்த வெற்றியின் பின்னர் தேசிய ஒருமைப்பாடு கட்டியெழுப்பப்படவில்லை இன மைய உளவியல் பரப்புரையால் அது சாத்தியப்படாமல் போயுள்ளது.தேசிய அரசியலில் இருப்பவர்கள் மாத்திரமல்ல உள்ளுர் அரசியல் காணப்படும் கடைநிலை அரசியல்வாதியும் இனத்தின் காவல் நாயாக தன்னை காட்டிக் கொள்ளவே விழைகிறார்கள். இதுதான் தேசிய ஒருமைப்பாட்டுக்கு விழுந்துள்ள பாரிய அடியாகும்.

ஊரகம், சாதியியல், முறைப்படுத்தப்படாத மாகணயியல் என்பன அதிகாரத்தை அடைவதற்கான புதிய பாதையாக காணப்படுகிறது.பல்லின சமூகம் கொண்ட இந்த தேசத்தில் இனவாதம் ஆளும் எதிர்தரப்பு என்று எதிர்பார்க்க முடியாத மையங்களிலிருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள தேசிய ஒருமைப்பாட்டினை கட்டி எழுப்பும் சிறுபான்மை தலைவர்கள் அரசியலில் நிலை நிறுத்தப்படவேண்டும்.

இந்த வகையில் கிழக்கில் இருக்கின்ற அரசியல் முகங்களில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் ஊரகம் கடந்து பணிசெய்யக்கூடியவராகவும் சமூகங்களோடு சேர்ந்து இயங்கக் கூடியவராகவும் காணப்படுகின்றார். சிலர் சில்லறைத்தனமாக அவர்மீது வைக்கும் விமர்சனங்கள் அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடே ஆகும்.

ஆகவே எமது பிராந்தியத்தின் உள்ளும் வெளியும் அவரினை முதன்மைப்படுத்தி தேசிய ஒருமைப்பாட்டினை காட்டியெழுபுதல் தற்போதைய காலத்தின் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.
அதாஉல்லாஹ் ஊரகம் கடந்து பணி செய்யக்கூடியவர் அதாஉல்லாஹ் ஊரகம் கடந்து பணி செய்யக்கூடியவர் Reviewed by Editor on February 21, 2020 Rating: 5