அக்கரைப்பற்று கட்டார் கம்யூனிட்டியின் ஒன்றுகூடல் ஒத்திவைப்பு


கத்தார்வாழ் அக்கரைப்பற்று சகோதரர்களே!

அக்கரைப்பற்று பெரியபள்ளியடியைச் சேர்ந்த ஹாசீம் – (ஓய்வு பெற்ற அக்கரைப்பற்று பிரதேச சபை வருமான அத்தியட்சகர), Accountant சாஜித் (Qatar) அவர்களின் மாமனார் கட்டாரில் காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ஆகவே அக்கரைப்பற்று கம்யூனிட்டி கத்தாரினால் நாளை அதாவது 21-February-2020 (வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளிர்கால ஒன்றுகூடல் (AKPCQ Winter Gathering 2020) மறு அறிவித்தல் வரும்வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்கிரியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக. அத்தோடு அனைத்து அக்கரைப்பற்று சகோதரர்களையும் ஜனாஸாவில் கலந்தது கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்

இன்ஷா அல்லாஹ் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

நிருவாகம்
AKPCQ
அக்கரைப்பற்று கட்டார் கம்யூனிட்டியின் ஒன்றுகூடல் ஒத்திவைப்பு அக்கரைப்பற்று கட்டார் கம்யூனிட்டியின் ஒன்றுகூடல் ஒத்திவைப்பு Reviewed by Editor on February 20, 2020 Rating: 5