(எம்.ஐ.எம்.இமாம்)
ஒவ்வொரு தேர்தலிலும் சாய்ந்தமருது மக்களின் வாக்குகளை நம்பியவர்களுக்கு இப்போது சாய்ந்தமருதில் நகரசபை கிடைத்துதான் தாமதம் ஆரம்பித்து விட்டார்கள் பிரதேச வாதம் என்ற நஞ்சுக்கருத்துக்களை.
பேசுவதற்கு இவர்களுக்கு சாய்ந்தமருதுக்கு நகரசபை கிடைத்தது ஒரு பெரிய விடயம் அல்ல. ஆனால் அது அதாஉல்லாஹ் என்கின்ற ஒருவனின் முயற்சியால் கிடைத்தது என்பதுதான் தாங்க முடியாத விடயமாக இருக்கின்றது.
காலகாலமாக மேடைகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாங்கள் தான் சபையை பெற்றுக்கொடுப்போம் என கூக்குறல் இட்டவர்களினால் செய்ய முடியாததை எந்த ஒரு படமும் பெருமையுமில்லாமல் செய்தார் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் செய்தார் என்பது தான் இவர்களது இப்போதைய பிரச்சினையாகும்.
இதற்காக இந்த கையாலாகதவர்களினால் பாவிக்கப்படுவது பிரதேசவாதம் அதுதான் கல்முனைக்கு துரோகம் நடந்துவிட்டதைப் போல் பேசி மக்களிடம் மீண்டும் பிரதேச வாதத்தை உண்டு பண்ணி அதிலும் குறிப்பாக கல்முனை மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். இவ்வளவு செய்த அதாஉல்லாஹ்வுக்கு கல்முனைக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுப்பெதென்பது ஒரு பெரிய விடயமே அல்ல என்பது நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸுக்கும் கூட தெரிந்த விடயமாகும்.
எண்ணம் தூய்மையாக இருந்தால் எல்லாம் சீராக நடைபெறும் என்பதற்கு உதாரணமான தலைவர் அதாஉல்லாஹ் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
கல்முனை விடயமும் சாய்ந்தமருது விடயம் போல வெற்றி பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அது வரைக்கும் தேர்தலை செய்ய வேண்டும் என்பதற்காக ஏதாவது ஒரு பிரதேசவாதம் பேச வேண்டும்,வாக்குகளை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக என்ன திருவு தந்திரம் போட்டாலும் இறைவனின் நாட்டத்தினால் எல்லாமே இனி செல்லாக்காசகாத்தான் அமையும்.
அறுவடை காலம் வருகிறது, ஆரம்பித்துவிட்டார்கள் பிரதேச வாதத்தை....
Reviewed by Editor
on
February 16, 2020
Rating:
Reviewed by Editor
on
February 16, 2020
Rating:
