அம்பாறை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையிலான மாவட்ட கரம் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று அணியினர் மாவட்ட சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அணிகள் பங்கு கொள்வார்கள்.
இவ்வருட போட்டி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று (16) இடம்பெற்ற இறுதிப் போட்டியில், அக்கரைப்பற்று அணியும் சம்மாந்துறை அணியும் மோதி, இறுதியில் அக்கரைப்பற்று அணி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
அக்கரைப்பற்று பிரதேச அணி நான்காவது தடவையாகவும் மாவட்ட சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ஆவது தடவையும் மாவட்ட கரம் சாம்பியனாக அக்கரைப்பற்று தெரிவு
Reviewed by Editor
on
February 16, 2020
Rating:
Reviewed by Editor
on
February 16, 2020
Rating:


