எதிர்வரும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் - 2020யில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போட்டியிடும் இளைஞர் பாராளுமன்ற வேட்பாளர் என்.எம்.சப்னாஸ் பற்றிய அறிமுகம்...
அட்டாளைச்சேனை-8ம் பிரிவில் காதர் முஹைதீன் நாசர் மற்றும் அப்துல் குத்தூஸ் பர்சானா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலத்தில் கற்றார். இவர் பாடசாலைக் காலத்தில் துடிதுடிப்பானவராகவும் ஆசிரியர்கள், முதியோர்களின் நன்மதிப்பிற்கும் தனது ஒழுக்கத்தால் கவரப்பட்டு வகுப்புத்தலைவர் ,மாணவத் தலைவர் , இளைஞர் கழகத் தலைவர் என சிறு பராயத்திலிருந்தே தலைவரானார்.
அத்தோடு பாடசாலைக் காலத்தில் சிறப்பாக கல்வி நடவடிக்கையை தொடர்ந்த இவர் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கும் தன் சமூகத்திற்கும் பெருமையைச் சேர்த்து கொடுத்தவராவார்.
தொடர்ந்து கல்வியையும் தாண்டி விளையாட்டுத்துறை, சமூக சேவை என சமூகத்தின் பக்கம் திசை திரும்பி தனது நல்ல செயற்பாடுகளையும் செய்யத் தொடங்கியதோடு தனது கல்வித் துறையில் க.பொ.த சாதாரண தரம் வரை கற்று சிறந்த சித்தியினை பெற்று, உயர் கல்வியை அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். இக் காலப் பகுியிலும் சாரணியம் பாடசாலை கலை கலாசார போட்டிகள் விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைத்தார்.
அத்தோடு இவரது இளமைக்காலம் நல்லொழுக்கம் சமூகம்சார் செயற்பாடுகளில் பயணிக்க சமூக நிறுவனங்களும் விளையாட்டுக் கழகங்களும் அழைப்பை விடுத்து தங்களோடு இணைத்துக் கொண்டன. அவற்றில் சிலவற்றை ஆராய வேண்டிய தேவையும் இவர் சமூகத்தின் பொறுப்பு பற்றி சிந்திக்கக் கூடியவரா என்பது பற்றியும் தெளிவு படுத்தலாம்.
அந்த வகையில் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மென் விளையாட்டுக் கழகத்தில் இணைந்த இவர் காற்பந்து விளையாட்டில் சிறந்த முறையில் வீரர்களை தன்வசப்படுத்தி செயற்பட்டதால் கழகத்தினால் காற்பந்து தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அட்டாளைச்சேனை விஸ்டம் இளைஞர் கழகத்தில் இணைந்து அமைப்பின் தலைவராக இருந்து இளைஞர்களை சமூகம் மற்றும் விளையாட்டுத்துறையில் சிறந்த பாதையில் செல்வதற்கு செப்பனிட்டு தலைமைத்துவ பட்டறை மற்றும் இளைஞர் படையணி என வழியமைத்து கடந்த காலங்களில் பல போட்டிகளில் கிண்ணங்கள் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுத்ததோடு அக்/அந்-நூர் மகா வித்தியாலய பாடசாலையின் சிறுவர் பூங்காவினை செப்பனிட்டும் பாடசாலைச் சுவரோவியங்களினூடாக மாணவர்களுக்கு மற்றும் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்துச் செல்லும் நோக்கில் சுவரோவிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்து செய்தும் கொண்டிருக்கிறார்.
பாடசாலை பழைய மாணவர்கள் சங்கம் பிரண்ட்ஷ் கடினபந்து விளையாட்டுக் கழகங்களிலும் அங்கத்தவராகவும் செயற் பட்டார். இவ்வாறு பயதித்த காலப் பகுதியில் சர்வதேச கழக்கு இளைஞர்கள் சர்வதேச மாதிரி ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளராகவும், ஜெனரல் மீடியா என்ட் பப்ளிசிங் என்ற ஊடகங்கள் போன்றவற்றில் தனத பதிவுகள் கோரிக்கைகள் போன்ற சமூகத்தின் மற்றும் இளைஞர்களின் பிரச்சினைகள் சவால்கள் தீர்த்து வைக்க அயராது உழைத்து வருகிறார்.
மேலும் களம் பெஸ்ட் இணையத்தளத்திலும் நிரூபராகவும் கடமையாற்றுவதும் குறிப்பிடத் தக்கது.
இவ்வாறானதொரு இளைஞர் எம் சமூகத்தில் இருந்து இளைஞர் பாராளுமன்றம் செல்வதனால் எம் இலக்குகளை இவரால் சர்வதேசம் வரை கொண்டு செல்ல முடியும் என்பது புலனாகிறது.
எனவே இளைஞர்களே சற்று சிந்தித்து விளையாட்டு என்பது மட்டும் இளைஞர்களின் தேவைப் பாடல்ல அதையும் தாண்டி சமூகத்திற்காக பேச வேண்டிய ஒரு சிறந்த பேச்சாளர் என்பதும் எம் இலக்கை எய்ய வழிவகுக்கும்..
இளைஞர்களே உங்கள் வாக்குகள் மூலம் சப்னாஸை வெற்றி பெற செய்து இளைஞர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வோம்.
இலங்கை இளைஞர் பாராளுமன்ற தேர்தல்!!! வேட்பாளர் அறிமுகம்- என்.எம்.சப்னாஸ்
Reviewed by Editor
on
February 07, 2020
Rating:
Reviewed by Editor
on
February 07, 2020
Rating:

