இலங்கையில் இவ்வருடம் (2020) நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டம், முசலி பிரதேச செயலகத்தை பிரதிநித்துவப்படுத்தி இளைஞர் வேட்பாளராக களமிறங்கிறார் வேப்பங்குளம் எம்.டீ.எம்.நாஜீம்.
மன்னார், முசலி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட வேப்பங்குளம் எனும் ஊரை பிறப்பிடமாகக் கொண்ட எம்.டீ.எம்.நாஜீம், மன்னார் எருக்கலம்பிட்டி மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை தொடர்ந்த இவர் ஓர் ஆளுமைமிக்க மாணவனாக தென்பட்டார்.
பாடசாலையில் அனைத்து விடயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர், க.பொ.தா (உ/த) பரீட்சையில் சித்தி அடைந்து யாழ்ப்பானம் பல்கலைக்கழகத்திற்கு தனது மேற்படிப்பை கற்க தெரிவானார்.
எம்.டீ.எம்.நஜீம் தனது கல்விக்கு அப்பால் சமூக சேவை பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவராவார். எப்போதும் இளைஞர்களுடனும், பெரியவர்களுடனும் மரியாதையாக பழகும் இவர், நல்லொழுக்கம் உள்ளவராவார்.
முசலி பிரதேசத்தில் இளைஞர்கள் சார்பாக களம் இறங்கவுள்ள எமது அன்புக்குரிய நஜீம் அவர்களை அதி கூடிய வாக்குகளால் வெற்றி பெற செய்வோம்.
இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அறிமுகம்!!! மன்னார் மாவட்டத்தில் எம்.டீ.எம்.நஜீம்
Reviewed by Editor
on
February 07, 2020
Rating:
Reviewed by Editor
on
February 07, 2020
Rating:
