மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இனி ரெடி


வாகன சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என
போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வெரஹரவுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற சென்று தமது நேரங்களை வீணடிக்க கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்ள ஏற்கனவே இருந்த டோக்கன் முறையும் மாற்றப்பட்டு இணையத்தின் ஊடாக மருத்துவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன் அனுமதி பெறப்படும் முறை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இனி ரெடி மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இனி ரெடி Reviewed by Editor on February 18, 2020 Rating: 5