சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் றாபீல் வீதி விபத்தில் உயிரிழப்பு


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் அமைப்பாளர் எஸ்.ஏ. முஹம்மது றாபீல் (வயது 45) வீதி விபத்து சம்பவத்தில் இன்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் வாகரை பகுதியில் உழவு இயந்திரமும் இவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதிலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் றாபீல் வீதி விபத்தில் உயிரிழப்பு சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் றாபீல் வீதி விபத்தில் உயிரிழப்பு Reviewed by Editor on February 16, 2020 Rating: 5