தம்புள்ளை மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் தனியார் பேருந்துகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 12வயதுடை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (21) காலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில், சுமார் 50 பயணிகள் குறித்த பேருந்துகளில் இருந்துள்ள நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்புள்ளை, விகாரை சந்தி பிரதேசத்தில் இருந்து சிவனொளிப்பாதமலை யாத்திரைக்கு சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தும்,கண்டியில் இருந்து கந்துருவெல மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேருந்துமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் நாவுல, தம்புள்ள மற்றும் மாத்தளை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரு பஸ்கள் மோதி கோர விபத்து, ஒருவர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்!!!
Reviewed by Editor
on
February 21, 2020
Rating:
Reviewed by Editor
on
February 21, 2020
Rating:
