பட்டதாரிகள் அரச தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை நீடிப்பு


பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 45ஆக உயர்த்தப்பட்டுள்ளது
என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் அரச தொழில் நாடி விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 35 என மட்டுப்படுத்தி முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அதனை விடவும் அதிக வயதையுடைய பட்டதாரிகள் மற்றும் மக்கள் அமைப்பினரின் கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இந்த  வயதெல்லையை அதிகரிக்க  தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப் படிப்பு ஒன்றை, அல்லது அதற்கு சமமான தகைமையாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019. 12. 31ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,

விண்ணப்பதாரி, தான் விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரி, 2020. 01. 01 ஆம் திகதி நிலவரப்படி - பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழில் ஏதுமின்றி இருப்பவர் என கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோர் உறுதிப்படுத்தவேண்டும்.

விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து,பட்ட சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு ஆவணத்தின் புகைப்படப் பிரதி ஒன்றினையும்.அந்த பிரதி  மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரின் மூலம் “உண்மைப் பிரதி” என்பதை உறுதிப்படுத்தி 2020. 02. 20ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை தபால் திணைக்களத்தின் துரித சேவை (Speed Post) ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்-2020,
நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு,
ஜனாதிபதி செயலகம்,
காலி முகத்திடல்,
கொழும்பு - 01.

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் -

பட்டதாரி எனின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்)”என்றும்,
டிப்ளோமாதாரி எனின் “டிப்ளோமாதாரி / (மாவட்டத்தின் பெயர்)” என்றும்,
குறிப்பிடப்படுதல் வேண்டும்.

குறித்த திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்களை சனாதிபதி செயலகத்தின் www.presidentsoffice.gov.lk  என்ற இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

பட்டதாரிகள் அரச தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை நீடிப்பு பட்டதாரிகள் அரச தொழிலுக்கு விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை நீடிப்பு Reviewed by Editor on February 09, 2020 Rating: 5