தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் இயங்கும் அம்பாறை ஹார்டி தொழில்நுட்பவியல் கல்லூரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிட தொகுதி திறப்புவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) காலை 10.00மணிக்கு கல்லூரியின் பணிப்பாளர் எஸ்.தியாகராஜா தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திறன் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்களும், கெளரவ அதிதிகளாக வனவள துறை இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திசாநாயக்க அவர்களும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜய்விக்ரம அவர்களும், விசேட அதிதியாக திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் டீ.எம்.அபேகுணவர்தன அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
இவர்களுடன் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், திணைக்களத்தின் உயரதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் பணிப்பாளர்கள், அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
அம்பாறை தொழில்நுட்பவியல் கல்லூரியில் புதிய கட்டிட திறப்புவிழா
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:
Reviewed by Editor
on
February 09, 2020
Rating:

