மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதே காலத்தின் தேவையாகும்



(ஜெமீல் அகமட் )
இன்று நாட்டில் சிறுபான்மை மக்களின் அடையாளத்துக்கும் தன்மானத்துக்கும் பாதிப்பு ஏற்படுகின்ற போது, தட்டிக்கேட்கின்ற ஒரு அரசியல்வாதியாக அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை நாம் இன்று பார்க்கின்றோம்.

வடக்கிலும் கிழக்கிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் வாக்குகளை சூரையாடி சுகபோகம் அனுபவிக்கின்ற அரசியல்வாதிகள் அந்த மக்களுக்கு இருக்கும் ஏகப்பட்ட பிரச்சினைகளை தீரைக்காத நிலையில் அந்த மக்களின் பிரச்சினையை பற்றி பேசி தீர்வுகான அரசியல் செய்கின்ற ஒரு கட்சி தலைவர் தான் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் என்றால் மிகையாகாது.

அன்று அகதியாக இருந்து வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இன்று இறைவனின் உதவியால் ஒரு கட்சியின் தேசிய தலைவனாக வந்தவர் என்ற அடிப்படையில் இந்த சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் இருக்கின்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை நன்கு அறிந்தவர் என்ற வகையில் மக்களின் கவலைகள் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவேண்டும் என்பதை தான் மக்கள் இந்த தலைவனிடமிரந்து மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் செல்கின்ற இடமெல்லாம் ஒன்று சேரும் மக்கள் வெள்ளம் எடுத்துக்காட்டுகின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டே இந்த அரசியலுக்கு வந்தவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

தலைவர் அஸ்ரப் அவர்களின் மரணத்துக்கு பின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஆசைப்பட்டு வாயால் கேட்டு வாங்கிக் கொண்ட றவூப் ஹக்கீம் கட்சியை வளர்த்துள்ளாரா ? அல்லது இந்த 20 வருடங்களாக சமூகத்துக்காவது ஏதாவது செய்திருக்கின்றாரா ? என்பதை மக்கள் திரும்பிப் பாருங்கள் எதுவுமே இல்லை.
றவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த காலத்தில் செய்தவற்றை திரும்பிப் பார்த்தால் இந்த சமூகமும் குர்ஆன் ஹதீஸை அடிப்படையாகக் கொண்ட கட்சியும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமைகளே இருக்கின்றன. இந்த சமூகத்தின் விடுதலை ஆவேசத்தில் இருக்கின்ற இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்திற்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக மறைந்த தலைவரால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக விடுதலை இயக்கம் (முஸ்லிம் காங்கிரஸ்) பலரின் சொகுசு வாழ்க்கைக்கெல்லாம் அடகு வைக்கப்பட்டடு பயன்படுத்தப்பட்டது அதனால் கட்சியும் அழிந்து சமூகமும் அழியும் நிலையை கண்டு இன்று மூத்த போராளிகள் கவலையும் விசனமும் அடைந்தவர்களாக தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் தலைமை தாங்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களின் முதுகெழும்பு என்று கூறும் அம்பாறை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அங்கு எத்தனையோ பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக காணிப் பிரச்சினைகள் இருக்கின்றன அந்த காணிகளை பல தரப்பினர் உரிமை கொண்டாடுகின்ற நிலைமைகள் உள்ளன சில இடங்களில் மக்களின் எதிர்கால இருப்பு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளதை நாமறிவோம்.

இன்று விவசாயம் சார்ந்த பிரச்சினைகள், சமூக பிரச்சினைகள் இருக்கின்றன இவைகளுக்கு தீர்வு கண்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அம்பாறை மாவட்ட மக்கள் கட்டாயமாக தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை ஆதரித்து எதிர்வரும் வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை பல துறைமுகங்கங்கள் பல தொழிற்சாலைகள் இருந்தாலும் படித்த இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பில்லை. இதனால் எத்தனையோ ஏழை குடும்பங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமின்றி வாழ முடியாத நிலையில் இருக்கின்றனர் இப்படியான நிலையில்
மக்களின் எந்தப் பிரச்சினையையும் தீராமல் மக்கள் காலத்துக்கு காலம் வாக்களித்த முஸ்லிம் காங்கிரஸோ, ஏனைய கட்சிகளோ தீர்த்து வைக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

எதிர் வரும் தேர்தல் களநிலவரத்தின் மக்கள் கருத்தை அறிய தேசிய தலைவர் ஒவ்வொரு ஊராக செல்கின்றார் அப்போது தாய்மார்களும், இளைஞர்களும் தேசிய தலைவரை வழிமறித்து தமது தேவைகள் நிறைவேற்றப்படாமை குறித்து கண்ணீர்விட்டு அழுவதை பார்க்கின்ற போது வெற்றுக் கோஷங்களால் இந்த மக்கள் காலாகாலமாக அரசியல் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பது புலனாகின்றது.

கடந்த கால ஏமாற்று அரசியல்வாதிகளையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை பற்றியும் சமூகம் நன்கு புரிந்துள்ளனர் அதாவது முஸ்லிம்களுக்கு ஒரு அநியாயம் நடக்கின்ற போது அந்த இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதலில் குரல் கொடுப்பது எந்த தலைமை என்பதை மக்கள் அறிவீர்கள்.

இன்று அரசியல் வட்டாரத்தில் இனவாதிகள் அதிகமாக தாக்கிப் பேசுவது என்றால் அது வேறு யாருமில்லை இந்த றிசாத் பதியுதீன் மட்டும் தான் தேசிய தலைவரின் அரசியல் வளர்ச்சியை தடுக்க அவரை இனவாதியாக சித்தரிக்க முற்படுகின்றனர் ஏனென்றால் சிறுபான்மை சமூகத்துக்காக எதனையும் துணிந்து தேசிய தலைவர் பேசுகின்ற ஒரேயொரு காரணம் என்பதை மக்களும் அரசியல்வாதிகளும் அறிந்து இருக்கின்றனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அவர்கள் முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு புறம்பாக எந்தக் காரியத்தையும் மேற்கொள்ளவில்லை எந்த முடிவையும் அல்லாஹ்வைப் பயந்து துணிச்சலாக எடுப்பதில் தேசிய தலைவர் என்றும் பின்வாங்கிய வரலாறுகள் கிடையாது,இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் தனித்து அல்லது ஏனைய சமூகங்களின் இனநல்லிணக்கத்தை கருத்திற்கொண்டு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும் அதில் இனையும் கட்சி எந்தப் பெரிய கட்சியாக இருந்தாலும் இந்த சமூகத்தின் அடையாளத்திற்கும் தன்மானத்திற்கும் மதிப்பளித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேற்பாளருக்கு தெரிவு புள்ளடியை ஒவ்வொருவரும் இடவேண்டும் அப்படி இடும் ஒவ்வொரு புள்ளடியும் என்பது சமூகத்தின் நலனுக்கு உதவி செய்யும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவே நாம் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கும் வேறு கட்சிகளுக்கும் வாக்களித்து ஏமாற்றம் அடைந்து இருக்கின்றோம் அது இன்றும் படிப்பினையாக எமது மனதில் இருப்பதால் நாம் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பெறுவதற்கான வாய்ப்பை கொடுத்து சமூகத்தின் குரல் ஓங்கி ஒலிக்க வழங்கும் சந்தர்ப்பம் என்பது எமது எதிர்கால பிள்ளைகளுக்கும் செய்கின்ற பெரும் உபகாரமாகும் அதனால் கடந்த காலங்களில் சமூகத்தை ஏமாற்றியவர்களுக்கு இந்த தேர்தலில் ஒரு பாடம் புகட்டுவதற்கு ஒன்றினைந்து தேசிய தலைவர் றிசாத் பதியுதீன் அவர்களை ஆதரிப்போம்.
மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதே காலத்தின் தேவையாகும் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதே காலத்தின் தேவையாகும் Reviewed by Editor on February 07, 2020 Rating: 5